மட்டக்களப்பில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி : நீதிமன்றம் விதித்த கடூழிய சிறைத் தண்டனை
மட்டக்களப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட ஆண் ஒருவருக்கு 20 வருடம் ஒத்திவைக்கப்பட்ட 7வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 20 ஆயிரம் ரூபா அபதாரமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

யாழின் அத்திப்பட்டி கிராமம்! 35 வருடங்களின் பின் அம்பலமாகும் உண்மைகள் - கிணற்றுக்குள் மனிதப்புதைகுழி
நபருக்கு எதிராக 2 குற்றச்சாட்டுக்கள்
குறித்த பிரதேசத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவரை அப்பேது 22 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையார் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் வெளிவந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபருக்கு எதிராக இரு குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் வழக்கு தொடர்ந்து மேல் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுவந்துள்ள நிலையில் கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது குறித்த நபருக்கு எதிராக 2 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சாட்சிகள் மற்றும் தடையப் பொருட்கள் வைத்திய அறிக்கைகள் மூலம் குற்றவாளி என இனங்கானப்பட்டார்.
இதனையடுத்து குறித்த நபருக்கு முதலாவது குற்றத்துக்கு 3 மாதகாலம் 7 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறும், இரண்டாவது குற்றத்திற்கு 20 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட 7 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ரூபா தண்டபணமாக செலுத்துமாறும்
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபாவை வழங்குமாறும் அந்த பணத்தை வழங்காத பட்சத்தில் சிறைத்தண்டனை என கட்டளையிட்டு தீர்ப்பளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
