பண்டாரகம சிறுமியின் மரணம்! தொடர்ந்தும் உண்மையை கண்டறியும் முயற்சிகள் (Video)
பண்டாரகம, அட்டுலுகமையில் மரணமான சிறுமி தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், சிறுமியின் சடலம் தொடர்பில் பிரேத பாிசோதனை இன்று இடம்பெறுகிறது.
எனினும் புதிய தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்று பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
காணாமல் போன சிறுமி
நேற்று முன்தினம், வீட்டில் இருந்து கோழியிறைச்சி வாங்குவதற்காக வியாபாரத்தளத்துக்கு சென்ற இந்த 9 வயது சிறுமி காணாமல் போனதாக முறையிடப்பட்டது.
இதனையடுத்து நேற்று மாலை அவரது உடலம் வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது.
விசாரணை
இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சிறுமியின் தந்தையும் கோழியிறைச்சி விற்பனையக உரிமையாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து தொடர்ந்தும் உண்மையை கண்டறியும் விசாரணைகள் இடம்பெறுவதாக பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
