பேருவளை சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
பாதுகாப்பற்ற மின்சார இணைப்புடன் ஏற்பட்ட தாக்கமே பேருவளையில் உயிரிழந்த 5 வயது சிறுமியின் மரணத்திற்கு காரணம் என பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
மின்சார அதிர்ச்சியின் தீவிரம் குழந்தையின் மார்புப் பகுதியில் ஏற்பட்ட காயங்களிலிருந்து தெளிவாக தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
பெற்றோர்களில் கடமை
மின்னேற்றியில் பொருத்தியிருந்த கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தியதில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் இன்றையதினம் பேருவளை பகுதியில் உயிரிழந்திருந்தார்.
இந்தநிலையில் சிறுமி மயங்கிக் கிடப்பதை கண்ட அவரது சகோதரர், அவரை உடனடியாக பேருவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை மின்சாரம் தாக்கி ஒரு குழந்தை இறப்பதற்கு 3 – 15வீத வாய்ப்புகள் இருப்பதாக குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மின்சாரத்தாக்கம் இதயத்தை அல்லது, மூளையை பாதிக்கலாம் என்றும், நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.
எனவே, இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது குழந்தைகளை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதுடன், இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுப்பதும் பெற்றோர்களில் கடமை எனவும் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan