யாழில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் உயிரிழப்பு
யாழில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் நேற்றையதினம்(15.04.2026) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு கடந்த பதின்மூன்றாம் திகதி வயிற்றுவலியுடன் வாந்தி ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டதுடன் வாந்தி எடுத்துள்ளார்.

அவரை அதிகாலை நான்கரை மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
குடல்வளரி ஏற்பட்டதால் வயிற்றுவலி ஏற்பட்டதாகவும், அதனால் வாந்தி எடுத்தவேளை சுவாசக் குழாயினுள் வாந்தி சென்ற காரணத்தால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
ஜேர்மனியில் கோவிட் தடுப்பூசியால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோர்: எலான் மஸ்கின் ஆதரவு செய்தி News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri