பட்டதாரியான காதலியை கொலை செய்த காதலன் : பெண்ணின் சகோதரி வெளியிட்ட தகவல்
ஹோமாகம நீதிமன்ற வீதியில் உள்ள வாடகை அறையில் நேற்று கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் காதலன் என கூறப்படும் இளைஞனும் அதிக அளவிலான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விவசாய அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தரான அச்சினி துஷார விஜேதுங்க என்ற 31 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் தகவல்
“என் சகோதரி வழக்கமாக தினமும் 6மணிக்கு வீட்டிற்கு வருவார். அன்று வெகுநேரமாகிவிட்டதால், எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தோம். அதிகாலையில் நாகொட பொலிஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது.
எனது தங்கையுடன் பழகிய இளைஞன் மாத்திரைகளை உட்கொண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறினார்கள்.
நாங்கள் முச்சக்கர வண்டியில் நாகொடைக்குச் சென்றோம். அங்கு இளைஞனின் தாயார் இருந்தார். உங்கள் தங்கையின் கழுத்தை அறுத்து விட்டேன். நீங்கள் சென்றால் காப்பாற்ற முடியும் என என்னுடைய தங்கையின் காதலன் கூறியிருந்தார்.
நாங்கள் விரைவில் ஹோமாகமவில் உள்ள தங்கையின் தங்கும் விடுதிக்கு வந்து பார்த்தோம், தங்கை முதல் நாள் இரவு படுகொலை செய்யப்பட்டதை அறிந்தோம். என் தங்கைக்கு ஏன் இப்படி நடந்தது? தங்கைக்கு என்ன நடந்தது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது” என ஹோமாகம பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய உயிரிழந்த பெண்ணின் சகோதரி தெரிவித்துள்ளார்.
எங்கள் குடும்பத்தில் நானும் என் தங்கையும் மட்டுமே. தங்கை தொழிலுக்கு போக ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிறது. அங்கு அந்த இளைஞனுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். அவர் எனது தங்கை பணியாற்றிய இடத்திலும் பணியாற்றியுள்ளார்.
அந்த உறவுக்கு சுமார் நான்கு மாதங்கள். தங்கை இதைப் பற்றி எங்களிடம் குறிப்பிட்டிருந்தார். நான் இப்போது அம்மா அப்பாவிடம் என்ன சொல்லப் போகிறேன்? என அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், விவசாய அமைச்சில் பணிபுரியும் 32 வயதுடைய பட்டதாரி என ஹோமாகம தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |