இத்தாலியிலிருந்து கொழும்பிற்கு அனுப்பப்பட்ட பரிசுப்பொதியில் சிக்கிய பொருள்
இத்தாலியில் இருந்து கொழும்பில் உள்ள பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட பரிசுப்பொதி ஒன்றிலிருந்து 30 கிலோ கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 212 மில்லியன் ரூபா என சுங்கப் பேச்சாளர், மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
இதன்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர் ஒருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரால் மேலதிக விசாரணை
மத்துகம பிரதேசத்தில் உள்ள முகவரிக்கு இந்த பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 29 நிமிடங்கள் முன்

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
