யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அல்ரா சவுண்ட் ஸ்கேன் அன்பளிப்பு! (PHOTOS)
மக்கள் வங்கியினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 7.5 மில்லியன் பெறுமதியான அல்ரா சவுண்ட் ஸ்கேன் (Ultrasound Scan) இயந்திரம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை 9 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மக்கள் வங்கி ஊழியர்களின் பங்களிப்பில் ஏற்கனவே கொழும்பு போதனா வைத்தியசாலைக்கும் கண்டி போதனா வைத்தியசாலைக்கும் இந்த இயந்திரம் வழங்கப்பட்ட நிலையில் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் பொது முகாமையாளர் ரஞ்சித் கொடித்துவக்கு, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி, பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா உள்ளிட்ட வைத்தியர்கள், வங்கி அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam