கபூரிய்யா அரபுக்கல்லூரியினை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய திட்டம்! அசாத்சாலி (Video)
கபூரிய்யா அரபுக் கல்லூரியினை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய திட்டமிடப்படுவதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பு கிராண்ட்பாஸில் இன்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கபூரிய்யா அரபுக் கல்லூரியின் நம்பிக்கையாளர்கள் அண்மைக் காலமாக அதன் ஸ்திரத்தன்மையையம், உடமையையும் பாரிய சவாலுக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
கபூரியா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்றைய ஜும்ஆ தொழுகை நிறைவு பெற்றதை தொடர், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்த முழுமையான தகவல்களை இக்காணொளியில் காணலாம்,

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
