ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்பினால்...! சீனாவுக்கு ஜெர்மன் பகிரங்க எச்சரிக்கை
ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்பினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜெர்மன் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை சீனா தொடங்கும் என அமெரிக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்க பயணம் மேற்கொண்ட ஜெர்மனி அதிபர் ஸ்கால்சிடம் இது தொடர்பில் வினவியபோதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனா விளைவுகளை சந்திக்க நேரிடும்
உக்ரைனில் நடந்து வரும் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக ஆயுதங்களை சீனா வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆனால், சீனா அப்படி செய்யாமல் அதில் இருந்து விலகி இருக்கும் என்றே நான் நேர்மறையாக எண்ணுகிறேன்.
ஒருவேளை ரஷ்யாவுக்கு ஆயுதங்களை சீனா வழங்கினால் அந்நாடு மீது தடை விதிப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதுபோன்று நடக்க கூடாது என நாங்கள் தெளிவுப்பட கூறி வருகிறோம். இந்த விவகாரத்தில் எங்களது கோரிக்கை வெற்றி பெறும் என்று நல்ல முறையிலேயே எண்ணுகிறேன். ஆனால், இந்த விசயத்தில் நாங்கள் கவனம் செலுத்தி, மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையெனில் சீனா அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.