புடினால் கொன்று குவிக்கப்படும் உக்ரைன் மக்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்
உக்ரைன் மீதான போரால் புடின் அளவிட முடியாத அழிவு மற்றும் மரணத்தை ஏற்படுத்தியதாக ஜேர்மனியின் ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் கடுமையாக சாடியுள்ளார்.
போலந்தில் நாசிகளுக்கு எதிரான வார்சா கெட்டோ எழுச்சியின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் ஸ்டெய்ன்மியர் தனது உரையின்போது புடின் குறித்து கூறுகையில், 'அமைதியான, ஜனநாயக அண்டை நாட்டின் மீதான தனது சட்டவிரோத தாக்குதலால் ரஷ்ய ஜனாதிபதி சர்வதேச சட்டத்தை மீறிவிட்டார்.
குற்றவியல் ஆக்கிரமிப்பு போர் இருக்கக்கூடாது
இந்தப் போர் உக்ரைன் மக்களுக்கு அளவிட முடியாத துன்பங்களையும், அழிவையும், மரணத்தையும் கொடுத்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது, ஐரோப்பா முழுவதும் தனது சொந்த நாட்டின் ஆக்கிரமிப்பின் படிப்பினைகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நமது ஐரோப்பிய பாதுகாப்பு ஒழுங்கின் அடித்தளத்தை அழித்துவிட்டது.
ஜேர்மானியர்கள் ஆகிய நாமும் நமது வரலாற்றின் பாடங்களைக் கற்றுக் கொண்டோம். மீண்டும் ஒருபோதும் என்பது ஐரோப்பாவில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவைப் போன்று குற்றவியல் ஆக்கிரமிப்பு போர் இருக்கக்கூடாது என்பதாகும்' என தெரிவித்துள்ளார்.