தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்ட ஜெர்மன் ஜனாதிபதி
ஜெர்மனி(Germany) தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் எனக்கூறி அந்நாட்டு ஜனாதிபதி தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜெர்மனியில் ஜனாதிபதி ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்து வருகின்றது.
இந்நிலையில்,கடந்த நவம்பரில் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவரான நிதி அமைச்சரை ஜனாதிபதி ஸ்கால்ஸ் திடீரென பதவிநீக்கம் செய்தார்.
ஜெர்மனி ஜனாதிபதி தேர்தல்
இதனால் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஸ்கால்ஸ் அரசு தோல்வியுற்ற நிலையில் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்றையதினம்(24) தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் ஜனாதிபதி ஒலாப் ஸ்கால்ஸ்(olaf scholz), கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி. சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர் களமிறங்கினர்.
இதற்கிடையே, எதிர்க்கட்சி தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் ஜனாதிபதி ஆவதற்கே வாய்ப்புள்ளது என்றும், அவரது கட்சி முன்னிலையில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒலாப் ஸ்கால்ஸ்
மேலும், ஏ.எப்.டி கட்சி இரண்டாவது இடம் பிடித்துள்ளது.தொழிலதிபரான எலான் மஸ்க் ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், காணொளி மூலமாகவும் பிரசாரம் செய்தார்.
இந்நிலையில், ஜெர்மனி சான்சலர் பதவிக்கான தேர்தலில் பிரெட்ரிக் மெர்ஸ் வெற்றி உறுதியானதை தொடர்ந்து, ஒலாஃப் ஸ்கால்ஸ் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு பிரெட்ரிக் மெர்ஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தேர்தல் முடிவுகளானது SPD கட்சியினருக்கு கசப்பானது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
