உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! உதவிகள் தடைப்படும் அபாயம்
ஐரோப்பாவில் உக்ரைனுக்கான ஆதரவு குறித்து சமீபத்தில் ஆய்வொன்று செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்கமைய நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு ஜேர்மானியர்களில் 54 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
மாறாக, போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்யாவுடன் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஜேர்மானியர்களில் 55 சதவிகிதத்தினர் விரும்புகிறார்கள்.
மக்களின் நிலைப்பாடு
இந்நிலையில், ஜேர்மனி மீண்டும் உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்க உள்ளது.

ஆனால், ஜேர்மனி உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் செய்வதற்கு, ஜேர்மன் மக்களிடம் ஆதரவு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் பிரபலங்கள் பலர் உக்ரைனுக்கு ஜேர்மனி ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தக்கோரி ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸுக்கு வெளிப்படையாக கடிதங்கள் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக, இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கும் வகையில் ஷோல்ஸ் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri