விசா செயலாக்க நேரத்தை அதிரடியாக குறைத்துள்ள ஜேர்மனி
ஜேர்மனி(Germany) செல்வதற்கு ஆர்வமாக இருக்கும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
ஜேர்மன் விசா செயலாக்க நேரம் 9 மாதங்களிலிருந்து தற்போது வெறும் 2 வாரங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்புகள்
இது தொடர்பாக ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் அனாலெனா பேர்பாக் தெரிவிக்கையில், "தேசிய விசாக்களுக்கான உலகின் மிகப்பாரிய விசா அலுவலகமாக ஜேர்மனியின் வெளியுறவுத்துறை உள்ளது. இங்கே திறமையான தொழிலாளர்கள் மிகவும் அவசரமாக தேவை" என்று கூறியுள்ளார்.
இந்தியர்கள் மத்தியில் ஜேர்மனி, அதிகமாக பிரபலமாகி வருகிறது. இதில் வேலை வாய்ப்புகள் மட்டுமின்றி, கல்வி நிலையங்களுக்காகவும் பிரபலமாக உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில், ஜேர்மனியில் சேரும் இந்திய மாணவர்கள் 107% அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய நிபுணர்கள் ஜேர்மனி செல்வதற்கு, தங்கள் தகுதிகள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும் மற்றும் அங்கு வேலைக்கு அழைப்பு பெற்றிருக்க வேண்டும்.
ஜேர்மனி செல்ல, ஒரு வருடம் கால அவகாசம் உள்ள கடவுச்சீட்டு , வேலை ஒப்பந்தம், மற்றும் பொருளாதார ஆதாரங்களைத் தயாரிக்க வேண்டும்.
இந்தியர்கள் ஜேர்மனி செல்வதற்கான செயல்முறைகள் மிகவும் எளிதானவையாக மாறியுள்ளதால், இது இந்திய தொழிநுட்ப நிபுணர்கள் மற்றும் மாணவர்களுக்கு மேலும் ஒரு சிறந்த வாய்ப்பாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.