அனுராதபுர ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மன் பெண்ணிற்கு நேர்ந்த கதி! சிக்கிய முகாமையாளர்
அனுராதபுரவின் பந்துலகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மன் பெண் ஒருவரை பாலியல் சீண்டல் செய்த நபர் அடையாள அணி வகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது அவர் அடையாளம் காணப்பட்டார்.
சிறையில் இருந்த சந்தேக நபரான ஹோட்டல் முகாமையாளரை அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகள் அடையாள அணிவகுப்புக்காக முன்னிலைப்படுத்தினர்.
பாலியல் சீண்டல்
முறைப்பாட்டாளராக இருந்த ஜெர்மன் பெண், ஹோட்டல் முகாமையாளரை அடையாளம் கண்டதை அடுத்து, அனுராதபுரம் தலைமையக பொலிஸார், ஹோட்டல் மேலாளர் மீது பாலியல் சீண்டல் செய்ததாக அதே நாளில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தனர்.
அணிவகுப்பின் போது சந்தேக நபரை அடையாளம் கண்டதையும், அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையும் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதவான் உத்தரவிட்டார்.
அனுராதபுரம், பந்துலகமவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியின் முகாமையாளரான ராஜித ரோஹன பொன்சேகா, தனது ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மன் பெண்ணை பாலியல் சீண்டல் செய்துள்ளார்.

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 1 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கர் அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam

மியான்மர் நிலநடுக்கம்: லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன? 10,000-ஐ தாண்டுமா பலி எண்ணிக்கை? News Lankasri
