கொழும்பு ரஸ்ய தூதரகத்தில் கையளிக்கப்பட்ட மடிக்கணினி: ஜேர்மனிய பெண் ஒருவர் கைது
கொழும்பில் உள்ள ரஸ்ய தூதரகத்தில், மடிக்கணினி ஒன்றை சந்தேகத்திற்கிடமான முறையில் கையளித்தமை தொடர்பாக ஜேர்மன் நாட்டு பெண் ஒருவர் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் அந்த வெளிநாட்டு நாட்டவர், ரஸ்ய தூதரகத்திற்கு வந்து, ஒரு மடிக்கணினியை ஒப்படைத்துவிட்டு, விரைவாக வளாகத்தை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெண் ஒருவர் கைது
இது பின்னர் தூதகரத்தில் பாதுகாப்பு பதற்றதை ஏற்படுத்தியது இந்தநிலையில் குறித்த வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் அந்த இளம் பெண்ணிடம் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் விசாரணையின் போது மடிக்கணினிக்கான கடவுச்சொல்லை வழங்க அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையிலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam