ஜேர்மனியை வெற்றிக்கொண்ட தினத்தில் உக்ரைனிலும் வெற்றியை கொண்டாட ரஷ்யா ஆயத்தம்!(Video)
பேரழிவிற்குள்ளான உக்ரைனிய துறைமுக நகரமான மரியுபோலில் "வெற்றி தின அணிவகுப்பை நடத்த ரஷ்யா திட்டமிட்டிருக்கலாம் என அந்த நகர முதல்வரின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய துருப்புக்களின் மரியுபோல் பகுதிகளுக்கு பொறுப்பேற்றுள்ள தளபதியான கோஸ்ட்யான்டின் இவாஷ்செங்கோ, "மே 9 ஆம் திகதி அணிவகுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக நகரின் மத்திய மாவட்டத்தின் இடிபாடுகள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை பகுதியை அகற்ற உத்தரவிடப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த அணிவகுப்பு ரஷ்யாவின் மிகப்பெரிய பொது விடுமுறை தினமான வெற்றி தினத்துடன் இணைந்ததாக அமையவுள்ளது.
இரண்டாம் உலகப் போரில் நாஷி ஜெர்மனிக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் மே 9 அன்று கொண்டாடப்படுகிறது.
இதேவேளை மரியுபோலில் சுமார் 1000 உக்ரைனிய வீரர்கள் தம்மிடம் சரணடைந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளபோதும் உக்ரைன் அதனை மறுத்துள்ளது.