சுவிஸின் மிக முக்கிய நகரத்தில் வெடி குண்டு தாக்குதல் நடத்த திட்டம் - ஜேர்மன் அதிகாரிகளால் முறியடிப்பு
ஜேர்மனியின் தெற்கு பகுதியில் உள்ள ஸ்டட்கார்ட்டில் வெடிபொருட்களை வாங்க முயன்றதாக சந்தேகிக்கப்படும் இரு சுவிஸ் நாட்டவர்களை கைது செய்த பின்னர், சுவிட்சர்லாந்தில் வெடிகுண்டுத் தாக்குதலைத் தடுத்ததாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 20ம் திகதி ஜேர்மனியின் ஸ்டட்கார்ட்டில் வெடிபொருட்களை வாங்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 24 மற்றும் 26 வயதுடைய இரு சுவிஸ் நாட்டவர்களை ஜேர்மன் சிறப்புப் படையினர் கைது செய்தனர்.
அரசு வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் பேடன்-வூர்ட்டம்பேர்க் மாநில குற்றவியல் காவல் அலுவலகம் இன்று இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் வெடிபொருட்களை "ஒரு பெரிய சுவிஸ் நகரத்தில் திட்டமிட்ட குற்றத்தில்" பயன்படுத்த விரும்பியதாக சந்தேகிக்கப்படுகிறது.
கூடுதல் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை
எவ்வாறாயினும், ஜேர்மன் பொலிஸின் கூற்றுப்படி, திட்டத்திற்கு "அரசியல் உந்துதல் பின்னணி" இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் திட்டம் அல்லது நோக்கம் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் பொலிஸ் காவலில் உள்ளனர். ஜேர்மன் மற்றும் சுவிஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
The Federal Office of Police (FEDPOL) மற்றும் சுவிட்சர்லாந்தின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் ஆகியவை கைது செய்யப்பட்டவர்கள் பற்றி அறிந்திருப்பதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹிருணிகா மற்றும் மைத்திரி விக்ரமசிங்கவின் பெண் விடுதலை 12 மணி நேரம் முன்

தேனிலவின்போது பிரித்தானியாவில் மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி: பதறவைக்கும் ஒரு செய்தி News Lankasri

தாய் தந்தையுடன் சேர்ந்து 5 வயது தம்பியை கொலை செய்த சிறுவனின் புகைப்பட அடையாளம் வெளியீடு! News Lankasri

மீனாவுக்கு அவரின் கணவர் கொடுத்த முதல் பரிசு என்ன தெரியுமா? அசத்திய சாகர்...உடனே ஓகே சொன்ன மீனா Manithan

விஜய் டிவி ராமர் இப்போ என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்....இது தெரியாம போச்சே? Manithan
