ஜேர்மனியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்தவர் உடனடியாக நாடு கடத்தல்
ஜேர்மனியில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.
ஜேர்மனியில் புகலிடம் கோரிய நபர் இலங்கைக்கு நுழையும் நோக்கில் விமான நிலையம் வந்துள்ளார்.
அவர் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல் ஒன்றில் பணியாற்றும் நோக்கில் அவர் இலங்கை வந்துள்ளார்.
நாடு கடத்தல்
அவரது குடிவரவு அனுமதிக்காக, இலங்கை கப்பல் நிறுவனத்தின் பிரதிநிதியுடன் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள குடிவரவு அதிகாரியை சந்தித்துள்ளார்.
எனினும் அங்கு அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் Continues Discharge Certificate மற்றும் வணிகக் கடலோடியாகத் தேவையான பிற ஆவணங்கள் போதுமானதாக இருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவரது குடிவரவு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு டோஹாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
