ஜெர்மனியில் இருந்து இலங்கை வந்த பெண் மரணம்
இலங்கைக்கு வந்த ஜெர்மன் பெண் ஒருவர், திடீர் உடல்நலக் குறைவு காரணமாகப் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சுற்றுலாப் பயணமாக இலங்கை வந்த 59 வயதான என்றியா சில்வியா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் 26 ஆம் திகதி தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் அவர் இலங்கைக்கு வந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி
பின்னர் கொழும்பு மற்றும் ஹபரணை ஆகிய இடங்களுக்குச் சுற்றுலா மேற்கொண்டிருந்தார்.

கடந்த 28 ஆம் திகதி கண்டிக்குச் சென்று அங்குள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.
கடந்த 29 ஆம் திகதி மதியம், தங்கியிருந்த விடுதியின் குளியலறைக்கு அருகே அவர் திடீரென மயங்கி விழுந்து கிடந்துள்ளதனை அவதானித்த விடுதி ஊழியர்கள், உடனடியாக அவரை மீட்டுப் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே அவர் உயிரிழந்துள்ளார்.
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam