தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு இலங்கைக்கான ஜேர்மன் பிரதி உயர்ஸ்தானிகர் விஜயம்
மட்டக்களப்பு - மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மிகவும் பிரசித்தி வாழ்ந்ததும் கிழக்கில் சின்னக் கதிர்காமம் என போற்றப்படும் தாந்தாமலை முருகன் ஆலயத்தை தொல்பொருள் இடமாக அடையாளப்படுத்திய இடங்களுக்கு நேரடி கள விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜேர்மன் பிரதி உயர்ஸ்தானிகர் Sarah Hasselbarth அங்கு காணப்படும் பிரச்சனைகள் தொடர்பாகவும்.
உண்மைத்தன்மை தொடர்பாகவும் இன்று (24.06.2026) கேட்டறிந்து கொண்டார்.
இதன்போ இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் வேண்டுகோளுக்கமைய இலங்கைக்கான ஜேர்மன் பிரதி உயர்ஸ்தானிகரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.
இதன்போது போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் வி.மதிமேனன், முன்னாள் மாகாண காணி ஆணையாளர் க.குருநாதன், இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகள், ஆலய பரிபாலன சபையினர் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




