ஜேர்மன் தூதுவர் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு விஜயம்
ஜேர்மன் மொழிக்கான பாடசாலைகளின் இணையம் PASCH இணைந்து வடமாகாணத்தில் ஜேர்மன் மொழி கற்பிக்கப்படும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு இன்று (செவ்வாய்) ஜேர்மன் தூதுவர் கென். கொள்கெர் சேயூபெர்ட் விஜயம் மேற்கொண்டார்.
கல்லூரி நிர்வாகம் அவரை வரவேற்று கல்லூரியில் ஜேர்மன் மொழி கற்கும் மாணவர்களுடனான சந்திப்பொன்றையும் நிகழ்த்தினர்.
இந்த வேளையில் மாணவர்கள் ஜேர்மன் மொழியிலான பாடல்களையும் உரைகளையும் நிகழ்த்தியதோடு தமிழ் கலாச்சார நடனங்களையும் ஆற்றுகைப்படுத்தினர்.
தூதுவர் தமது உரையில் 2023ஆம் ஆண்டு ஜேர்மன் - இலங்கை இடையிலான நட்புறவின் 70
ஆம் ஆண்டு நிறைவு செயற்பாடுகளுக்கு சென் பற்றிக்ஸ் கல்லூரியின் ஒத்தாசையை
நாடிநின்றதோடு கடந்த 10 ஆண்டுகளாக இக் கல்லூரி ஜேர்மன் மொழி, கலாச்சார,
பண்பாட்டுச் செயற்பாடுகளுக்கு வழங்கி வரும் ஊக்கத்திற்கு நன்றி கூறி சர்வதேச
ரீதியிலான ஒத்துழைப்பையும் வாழ்த்தி நின்றார்.



யூத் படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் நாயகனாக நடிக்கும் அடுத்தப்படம்... இயக்குனர் யார் தெரியுமா? Cineulagam
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan