ஈழத்தமிழருக்கு நடந்தது இனப்படுகொலையே! கனடாவின் பிரதான எதிர்கட்சி பகிரங்க குற்றச்சாட்டு (Video)
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை எனவும் போர்க்குற்றம் செய்ததற்காக இலங்கை அரசு தண்டிக்கப்படும் என்றும் கனடாவின் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் எதிர்க்கட்சித் தலைவரும், பழமைவாதக்கட்சியின் தலைவருமான Pierre Poilievre ஞாயிற்றுக்கிழமை (30/10/2022) கனடாவின் ரொறன்ரோ பெருநகர்ப் பகுதியின் முக்கிய நகரான மிசிசாகா நகருக்கு சென்றுள்ளார்.
மக்களுடன் கலந்துரையாடல்
இதன்போது ரொறன்ரோ பெருநகர்ப் பகுதியில் வாழும் கொன்சவேடிவ் கட்சியின் தமிழ் ஆதரவாளர்களை பிரத்தியேகமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கொன்சவேடிவ் கட்சி ஆட்சியில் Pierre Poilievre முன்வைக்கவிருக்கும் பல்வேறு நிலைப்பாடுகளை தெளிவாக்கும் வகையிலும் இந்த கலந்துரையாடல் அமைந்துள்ளது.
இதன்போது தமிழ் கனடியர்கள் ஒரு சமூகமாக எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தமிழ் செயல்பாட்டாளர்களுடன் ஆராயப்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில், தற்போதைய லிபரல் அரசாங்கம் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், மற்றும் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் நிலை என்பன தொடர்பில் காட்டிவரும் மேம்போக்கான நிலைப்பாடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவற்றைச் செவிமடுத்த Pierre Poilievre எதிர்வரும் காலங்களில் அது குறித்து கொன்சவேடிவ் கட்சி செய்யவிருக்கும் எதிர்வினைகளை விளக்கியுள்ளார்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலை
அதன்பின்னர் கொன்சவேடிவ் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் தொண்டூழியர்களின் முன்னிலையில் Pierre Poilievre உரையாற்றியுள்ளார். உரையின்போது கனடாவின்பொருளாதாரத்தை சீர்செய்ய எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளில் சிலவற்றை பியர் விபரித்துள்ளார்.
மேலும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை அழுத்தமாகத் தெரிவித்த அவர், போர்க்குற்றம் செய்ததற்காக இலங்கை அரசு தண்டிக்கப்படும் என்றும் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது ஆட்சியின்போது முன்னாள் பிரதமர் Stephen Harper, முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் John Baird ஆகியோர் இலங்கை சார்ந்த விடயங்களில் முன்னெடுத்த செயல்பாடுகளையொத்த அரசியல் நடவடிக்கைகளையே தானும் முன்னெடுக்கப்போவதை உறுதி செய்துள்ளார்.
நன்றி தெரிவிப்பு
இச்சந்திப்பின்போது அல்பேட்டா மாகாணத்தின் Calgary Forest Lawn தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினரும், நிதி மற்றும் நடுத்தர வர்க்க செழிப்புக்கான நிழல்
அமைச்சருமான Jasraj Hallan, ஒன்ராறியோவின் Flamborough Glanbrook தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர் Dan Muys, ஒன்ராறியோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்,
கொன்சவேடிவ் கட்சியின் துணைத் தலைவருமான Melissa Lantsman ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
மேலும் கொன்சவேடிவ் கட்சியின் தலைமைத்துவ தேர்தல் காலகட்டத்தில் இரவு பகல்
பாராமல் அயராது உழைத்ததன் மூலம் 68.15% வாக்குகளை தனக்குப் பெற்றுக் கொடுத்து
வெல்ல வைத்த தமிழ் தொண்டூழியர்களில் சிலரை Pierre Poilievre நேரில் சந்தித்து
நன்றியும் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
