ஜெனிவாவின் யோசனைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள பொன்சேகா-செய்திகளின் தொகுப்பு
"இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை. 40 ஆயிரம் பேர் கொல்லப்படவும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜெனிவா விவகாரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "இராணுவ குறைப்பு செய்யப்பட வேண்டும் என்ற ஜெனிவா யோசனை ஏற்புடைய விடயம் அல்ல. அதனை ஏற்க முடியாது. இராணுவ பலத்தை எண்ணிக்கையுடன் மதிப்பிடக்கூடாது.
இராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை வைத்துதான் கணக்கிட வேண்டும். இலங்கை இராணுவம் இன்னமும் தொழில்நுட்பம் ரீதியில் மேம்படவில்லை. எனவே, படைக் குறைப்பு யோசனை ஏற்புடையது அல்ல.
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை. 40 ஆயிரம் பேர் கொல்லப்படவும் இல்லை. ஓரிரு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம். அது தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தலாம். இதனை போர் முடிந்த கையோடு செய்யாததாலேயே பிரச்சினை ஏற்பட்டது"என கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam