ஜெனிவா விவகாரம்! அரசை மீறி எதுவும் நடக்காது: ரணில் உறுதி
"ஜெனிவா சவாலை நாம் இலகுவாக முறியடித்தே தீருவோம். புதிய பிரேரணை தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இலங்கை அரசை மீறி நாட்டுக்கு எதிராக எதுவும் நடைபெற சந்தர்ப்பம் இல்லை.”என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலண்டன் செல்வதற்கு முன்னர் அரசின் மூத்த உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“ஜெனிவா விவகாரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துக்களை வெளியிடும் போது அரசு என்ற ரீதியில் மிகவும் அவதானமாக இருங்கள்.
நல்லாட்சி அரசைக் குறைகூற வேண்டாம்

ஜெனிவா நெருக்கடிக்குக் கடந்த நல்லாட்சி அரசைக் குறைகூறி எந்த பயனும் இல்லை. அந்தக் கால பகுதியில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நல்லாட்சி அரசு இணை அனுசரணை வழங்கியதில் எந்தத் தவறும் இல்லை.
அந்த விடயத்தில் நல்லாட்சி அரசு வெற்றியும் கண்டுள்ளது.
ஜெனிவா விவகாரம்

ஜெனிவா விவகாரம் தொடர்பில் இனவாதத்தையோ அல்லது மதவாதத்தையோ தூண்டும் வகையில்
எவரும் கருத்துக்களை வெளியிடாதீர்கள்"என ஜனாதிபதி கூறினார்
என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri