மாலைத்தீவில் நடைமுறைக்கு வரும் புதிய தடை
மாலைத்தீவில் நேற்று சனிக்கிழமை முதல் புகையிலை மீதான தலைமுறை தடை நடைமுறைக்கு வந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, உலகில் இதுபோன்ற தடையை விதித்துள்ள ஒரே நாடு மாலைத்தீவாக மாறியுள்ளது.
இந்த தடையின்படி, ஜனவரி 2007 க்குப் பிறகு பிறந்த எவருக்கும் இந்த நடவடிக்கை பொருந்தும்.

தடையின் குறிக்கோள்
பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதும் புகையிலை இல்லாத தலைமுறையை ஊக்குவிப்பதும்" இந்தத் தடையின் குறிக்கோள் என்று மாலைத்தீவு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய விதியின் கீழ், 2027 ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள், மாலத்தீவுகளுக்குள் புகையிலை பொருட்களை வாங்குவது, பயன்படுத்துவது அல்லது விற்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று அந்த அமைச்சு கூறியுள்ளது.
இந்த தடை சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, புகைபிடிப்பதற்கு எதிராக இதுபோன்ற சட்டத்தை நியூசிலாந்து நிறைவேற்றியபோதும்,அது அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள், 2023 நவம்பரில் ரத்து செய்யப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam