வவுனியாவில் தடுப்பூசி பெற ஆர்வம் காட்டும் பொதுமக்கள்
வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில், வவுனியா - கந்தபுரம் வாணி வித்தியாலய மண்டபத்தில் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று ஆரம்பமாகி மாலை வரை இடம்பெற இருக்கிறது.
இதில் அதிகளவான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தடுப்பூசியினை செலுத்தி கொண்டுள்ளனர்.
1500 தடுப்பூசிகளின் முதல் டோஸ் இன்றைய தினம் பொதுமக்களிற்கு செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் தடுப்பூசி போட ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நேற்று வரை வவுனியாவில் 54000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் கந்தபுரம், கோயில்குளம், பாவற்குளம், செட்டிகுளம், பூவரசங்குளம், கன்னாட்டி, நேரியகுளம், நெடுங்கேணி போன்ற 16 நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.






சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan