மாகாணசபை தேர்தல் குறித்து சட்டமா அதிபரின் நிலைப்பாடு - தினேஷ் குணவர்தன கூறியுள்ள விடயம்
புதிய சட்டத்தை நிறைவேற்றாமல், பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாது என்பது சட்டமா அதிபரின் நிலைப்பாடு எனத் தேர்தல் சட்டவிதிமுறைகளை மறுசீரமைக்கும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயங்கும் மாகாணசபைகளுக்காகத் தேர்தல் நடத்த வேண்டியது அவசியம் என்ற போதிலும் அதற்கு சட்டரீதியான நிலைமை தடையாக இருக்கின்றது எனவும் அவர் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நேற்று நாடாளுமன்றத்தில் கூடிய போதே தினேஷ் குணவர்தன இதனைக் கூறியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக தற்போதுள்ள சட்டத்தை இரத்துச் செய்தாலும் புதிய சட்டத்தை உருவாக்காமல் எந்த முறையிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது எனச் சட்டமா அதிபர் தெரிவுக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
