பிரித்தானியாவில் விரைவில் பொது முடக்கம்?
பிரித்தானியாவில் பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் சஜிட் ஜாவிட் தெரிவித்துள்ளார்இ
தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்ட றியப்பட்ட உருமாறிய கோவிட் தொற்றான ஒமிக்ரோன் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்து, நெதர்லாந்து, போர்சுக்கல், இத்தாலி, ஸ்காட்லாந்து, அமெரிக்கா, இலங்கை, அவுஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர், நைஜிரீயா, பிரான்ஸ் உள்பட 89 நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் பரவி விட்டது.
முதலில் சாதாரணமாக தெரிந்த ஒமிக்ரோன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 3 நாட்களில் இதன் தாக்கம் உச்சத்தை தொட்டு விட்டது. உயிரிழப்பும் கூடுதலாகி வருவதால் உலக நாடுகள் அனைத்தும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கி உள்ளன. நெதர்லாந்தில் நேற்று முதல் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் பிரித்தானியாவில் ஒமிக்ரோன் தனது கோரமுகத்தை காட்ட தொடங்கி விட்டதால் அங்கும் பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்த அந்நாடு முடிவு செய்துள்ளது.
இன்னும் சில நாட்களில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வர இருக்கின்றன. இந்த விழாக்களின் போது ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடுவார்கள். இதன் மூலம் ஒமிக்ரோன்
பாதிப்பு அதிகரிக்கப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதனால் இந்த கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன.
இவ்வாறான சூழலிலேயே பிரித்தானியாவில் பொது ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது குறித்து இன்னும் ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார், எனினும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
you may linke this video