இன்று இரவு வானில் நிகழவுள்ள அதிசயம்
2025 ஆம் ஆண்டின் மிகவும் கண்கவர் விண்கல் பொழிவு இன்று (13) இரவு வானில் தெரியும் என்றுவிண்வெளி விஞ்ஞானியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவில் கிழக்கு திசையிலிலிருந்து இந்த விண்கல் பொழிவு தெரியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விண்கல் பொழிவு "ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு" (Geminids meteor shower) என்று அழைக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
விண்கல் மழை
அந்தவகையில் ஒரு மணி நேரத்தில் சுமார் 150 விண்கற்கள் தெரியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு மற்ற விண்கல் மழைகளைப் போலல்லாமல், வால் நட்சத்திரத்தின் எச்சங்களிலிருந்து உருவாகாமல், 3200 பேதான் (Phaethon) எனப்படும் சிறுகோளின் சிதைவிலிருந்து உருவானது.

இதற்கு சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. வெறும் கண்களாலேயே இதைக் காணலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் பழமையான ஜெமினிட் விண்கல் மழை "ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விண்கல் மழைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri