இரத்தினக்கல் விற்பனை நிலையத்தில் கைவரிசை காட்டிய நபர் கைது
கடந்த 13 ஆம் திகதி பேருவளையிலுள்ள இரத்தினக்கல் விற்பனை நிலையமொன்றில் 57 இலட்சம் பெறுமதியான இரத்தின கற்கள் திருடப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இரத்தினக்கல் விற்பனை நிலைய உரிமையாளர் எமது ஊடகத்தின் ஊடாக சந்தேகநபரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் உதவிக்கோரியிருந்தார்.
இதற்கமைய, சந்தேகநபர் தொடர்பான காணொளியினை எமது ஊடகத்தில் வெளியிட்டிருந்தோம்.
அடையாளம் காணப்பட்ட நபர்
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை காணொளியில் கண்டவர்கள் நீர்கொழும்பு பகுதியில் வைத்து நேற்று (19.01.2024) அடையாளம் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த தகவலுக்கமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து திருடப்பட்ட 57 இலட்சம் பெறுமதியான இரத்தின கற்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதனையடுத்து இரத்தினக்கல் விற்பனை நிலைய உரிமையாளர் எமது ஊடகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan