யாழில் ஜெலட்டின் குச்சிகள் மீட்பு
யாழ்ப்பாணம் - பாசையூர் பகுதியில் பாழடைந்த வீடொன்றிலிருந்து ஜெலட்டின் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த மீட்பு நடவடிக்கையானது இன்றையதினம் (03.07.2023) முன்னெடுக்கபட்டுள்ளது.
இது தொடர்பில் இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்.விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த ஜெலட்டின் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸார் மேலதிக நடவடிக்கை
இதேவேளை பொதி ஒன்றினிலிருந்து 20 ஜெலட்டின் குச்சிகளே மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் மீட்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத செயற்பாடு
குறித்த ஜெலட்டின் குச்சிகளில் உள்ள வெடி மருந்துகளை பிரித்தெடுத்து மீன் பிடிக்கான டைனமேட் தயாரிக்க கடற்றொழிலாளர்கள் பயன்டுத்தியுள்ளனர்.
இதற்கமைய டைனமேட் பயன்படுத்தி கடற்றொழில் ஈடுபடுவது சட்டவிரோத செயற்பாடு என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
