தற்போதுள்ள நிலைமை சிறந்ததாக இல்லை! - கீதா குமாரசிங்க
மக்களுக்கு கோவிட் தடுப்பூசியை வழங்க முடியாமை குறித்து சில நேரம் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சரியான முறையில் தடுப்பூசியை வழங்க முடியாது இருப்பதாகவும், முடிந்தவரை தடுப்பூசியை வரவழைத்து மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதுள்ள நிலைமை சிறந்ததாக இல்லை. எந்த நாட்டில் இருந்தாவது தடுப்பூசியை வரவழைத்து மக்களுக்கு வழங்க வேண்டும்.
அரசியலுக்கு வந்ததற்கு பதிலாக கலைத்துறையில் இருந்திருக்கலாம்.
புத்தாண்டு சமயத்தில் மக்கள் விரும்பியவாறு களியாட்டங்களில் ஈடுபட இடமளித்து விட்டு அரசாங்கம் மௌனமாக இருந்தது.
சிலர் கோவிட் இல்லாதது போல் நடந்துக்கொள்கின்றனர் எனவும் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
