க.பொ.த உயர் தரத்தில் சிறந்த சித்தி பெற்ற ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலய மாணவர்கள்
ஆலங்கேணி, கிண்ணியா 2023/2024 கல்வி ஆண்டிற்கான அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோன்றிய 08 மாணவர்களில் 3A பெற்ற 3 மாணவர்கள் உட்பட 05 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
பின்தங்கிய கிராமம்
இதனை அப்பாடசாலையின் அதிபர் சபா. இந்திரசிறியும் அம்மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் பொது மக்களும் மனமார வாழ்த்துவதாக தெரிவித்துள்ளனர்.

மிகவும் பின்தங்கிய ஆலங்கேணி கிராமத்தில் முக்கிய பாடத்திற்கு ஆசிரியர் பற்றாக்குறையுள்ள ஓர் பாடசாலையில் மூன்று மாணவர்கள் 3A சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இவர்கள் தங்களுடைய பல்கலைக்கழக கல்வியை மேற்கொண்டு தொடர உங்களுடைய ஆசிர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் அள்ளி வழங்குமாறு வேண்டுகின்றனர்.



4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan