உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட முக்கிய அறிவிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விரைவில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இத்தகவலை கல்வி அமைச்சர் நேற்று (19.09.2023) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு பிற்போடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன முன்வைத்த யோசனைக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உடனடியாக அறிவிப்பு
உயர்தரப் பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை நடாத்தி, அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படலாம்.
அத்துடன் அடுத்த வருட (2024 ஆண்டுக்குரிய) உயர்தரப் பரீட்சை வழமை போல் நடத்தப்படலாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் யோசனை முன்வைத்தார்.
அதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் குறித்த யோசனையை ஏற்றுக்கொண்ட போதிலும் இறுதி முடிவு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் உள்ளது என்று வலியுறுத்தினார்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் உடனடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிடுமாறு கோரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையானின் கடத்தலில் புதிய சர்ச்சை! தீவுச்சேனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரவீந்திரநாத்தின் மர்மம் (VIDEO)
நட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |