உயர்தர பரீட்சைகளை மீள ஆரம்பிப்பது குறித்து வெளியான அறிவிப்பு
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை மீள ஆரம்பிப்பது குறித்து விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்த விசேட கலந்துரையாடல் இன்று மாலை பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெறவுள்ளது.
விசேட கலந்துரையாடல்
இந்த கலந்துரையாடலின் முடிவுகள் குறித்து நாளை காலை இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பரீட்சைகளை மீள ஆரம்பிக்கும் திகதிகள் மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகிகள் பாதிப்புகளை குறைக்கும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
மேலும், பரீட்சை நடைபெறும் போது சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.