2023 ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தர பரீட்சாத்திகளின் வருகை வீதம் குறித்து வெளியான அறிவிப்பு
2023ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கட்டாய வருகை வீதத்தில் கல்வி அமைச்சு திருத்தம் செய்துள்ளது.
இன்று (20.07.2023) நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சமர்ப்பித்த விசேட அறிக்கையொன்றிலேயே இது குறித்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது அனுமதி விண்ணப்பங்களைப் பெறுவதற்கு ஆகக்குறைந்த வருகை வீதம் 40 வீதத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
"கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் போது கல்வித் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கட்டாய வருகை வீதம் தொடர்பான சுற்றறிக்கை
நெருக்கடிகள் காரணமாக பல மாணவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு தேர்வு விண்ணப்பத்திற்கான வருகை விகிதத்தில் திருத்தம் செய்துள்ளோம்.
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட கட்டாய வருகை வீதம் தொடர்பான சுற்றறிக்கை அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கு (2023) மட்டுமே கட்டாய வருகை விகிதம் குறைந்தபட்சம் 40% ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27 முதல் டிசம்பர் 21, ஆகிய காலப்பகுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan