ரத்து செய்யப்படும் முக்கிய வர்த்தமானி! நீதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையின் சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தனி ஆங்கில மொழியில் தோற்ற வேண்டும் என்பதை ரத்துச்செய்யும் வகையில், அடுத்த வாரம் நாடாளுமன்றில் குறித்த வர்த்தமானி முன்வைக்கப்படவுள்ளது.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனை இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் மற்றும் ஏனைய தரப்புக்கள் தொடர்ந்தும் விடுத்து வரும் கோரிக்கைகக்கு இணங்க இதனை தாம் நாடாளுமன்றில் முன்வைப்பதாக நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு தரப்பினர் கோரிக்கை
சட்டக்கல்லூரிக்கான அனுமதிப் பரீட்சைக்கு ஆங்கில மொழியில் மாத்திரமே தோற்ற வேண்டும் என்ற வர்த்தமானி முன்னாள் நீதியமைச்சர் அலி சாப்ரியால் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இதனை மூன்று வருடங்களுக்கு பின்னர், நடைமுறைப்படுத்துமாறு தாம் விடுத்த கோரிக்கையை, நீதி கல்விச் சபை நிராகரித்துள்ளதாக நீதியமைச்சர் இன்று நாடாளுமன்றில் கூறியுள்ளார்.
எனவே, பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து தொடரும் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நாடாளுமன்றத்தின் ஊடாக,ரத்துச்செய்ய முடியும் என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
May you like this Video

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 4 மணி நேரம் முன்

அசோக் செல்வன் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இவர்தான் காரணமாம்! புகைப்படத்துடன் லீக்கான விமர்சனம் Manithan
