புதிய சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய விஷேட வர்த்தமானி வெளியீடு
நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய புதிய வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கூட்டங்கள், ஒன்றுகூடல் நடத்துவதற்கு சுகாதார அமைச்சரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது மீண்டும் கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான கட்டளை சட்டத்தை திருத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
கோவிட் வைரஸ் தொற்றுப்பரவல் நிலைமையை பொறுத்து ஒன்றுகூடல் செயற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரியொருவரினால் தீர்மானிக்க முடியுமென வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றுகூடல் செயற்பாடு அல்லது நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கு அனுமதிக்க கூடிய அதிகூடிய நபர்களின் எண்ணிக்கை அல்லது மொத்த எண்ணிக்கை, சதவீதம் என்பற்றை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
அனுமதி பெறாது ஒன்றுகூடல்களை நடத்தக்கூடாது எனவும் அதிவிசேட வர்த்தமானியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


