40,000 ஹெக்டயார் நிலப்பரப்பு தொடர்பில் கையொப்பமிடப்பட்டுள்ள வர்த்தமானி
40,000 ஹெக்டயார் நிலப்பரப்பை வனப்பகுதியாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பாறை - திருக்கோவில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை வனப்பகுதிகளாக அறிவிக்கப்படாத 40,000 ஹெக்டயார் நிலப்பரப்பை வனப்பகுதியாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நாட்டில் 5,000 ஏக்கர் சதுப்பு நிலம் இன்னும் வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்படவில்லை.
நாட்டின் கடற்பரப்புகளை அண்மித்த பகுதிகளில் 12,000 ஹெக்டயார் சதுப்புநிலம் காணப்படுகின்றது.
அதில் 80 சதவீதமானவை அழிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
