அதிரும் காசா களமுனை! 50 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை
அரபு நாடுகளையும், சர்வதேசத்தையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ஹமாஸை இலக்கு வைத்த இஸ்ரேலின் தாக்குதல் நகர்வானது காசா மக்களின் பலி எண்ணிக்கையை பல மடங்காக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2023 ஒக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்ததாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1ஆம் திகதி முடிவுக்கு வந்தது.
போரின் உக்கிரம்
இதனை அடுத்து மீண்டும் போரின் உக்கிரம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
கடந்த 5 நாட்களில் மாத்திரம் காசாவில் 600க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், லெபனான் மீதும் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 41 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 50,021 ஆக உயர்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அதன் அறிக்கையில் இதுவரை 113,000 க்கும் மேற்பட்டோர் போரில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு News Lankasri

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர் News Lankasri
