காஸா எல்லையை மீண்டும் கைப்பற்றிய இஸ்ரேல்! அந்நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
காஸா எல்லையை இஸ்ரேல் மீண்டும் கைப்பற்றியுள்ளதாகவும் பாலஸ்தீனியர்களுடனான மோதலின் 75 ஆண்டுகால வரலாற்றில் மிகக் கடுமையான வான்வழி தாக்குதல்களை நடத்துவதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை
இந்த தாக்குதலில் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், தெருக்களிலும், நடன விருந்துகளிலும் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் காஸாவிற்கு பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
காஸா அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேலிய தாக்குதலில் சுமார் 700 காஸா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 180,000 காஸா மக்கள் வீடற்றவர்களாக உள்ளனர், பலர் தெருக்களில் மற்றும் பாடசாலைகளில் குவிந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியது.
அறிவிப்பு
காஸாவில் உள்ள கான் யூனிஸ் மருத்துவமனையில் உள்ள பிணவறை உடல்களால் நிரம்பி வழிகிறது என தகவல் வெளியாகியுள்ளது. முழுமையான எண்ணிக்கை கிடைக்கவில்லை மேலும், இறந்தவர்களின் உடல்களை வைக்க அதிக இடவசதி இல்லாததால், அவற்றை விரைந்து எடுத்துச் செல்லுமாறு உறவினர்களிடம் மருத்துவர்கள் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் ஹமாஸ் தாக்குதலில் 6 பத்திரிகையாளர்கள் உள்ளடங்களாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், இஸ்ரேலில், சனிக்கிழமை நடந்த தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் முழுமையான எண்ணிக்கை இன்னும் கிடைக்கவில்லை.

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
