ஹமாஸ் தாக்குதலில் 24 இஸ்ரேல் படையினர் பலி
காசாவின் ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட வெடிகுண்டுத் தாக்குதலில் ஒரே நாளில் 24 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த 3 மாதமாக நடந்துவரும் போரில் இது மிகவும் மோசமான தாக்குதல் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
வெடிபொருள்களை தயார் செய்துகொண்டிருந்த போதே ஹமாஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் 24க்கும் மேற்பட்ட படையினரா தாம் இழந்திருப்பதாக இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார்.
சுகாதாரத் துறை அமைச்சகம்
இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 190 போ் உயிரிழந்ததுடன் 340 போ் காயமடைந்துள்ளனர்.

சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று (22.1.2024) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், இப்பகுதியில் இஸ்ரேலியத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 25,295ஆக அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை சுமாா் 63,000 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri