ட்ரம்பின் வெற்றியால் சாத்தியமான இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்!
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த விவகாரமானது, கடந்த நவம்பரில் முன்னடுக்கப்பட்ட வரலாற்று வெற்றியின் விளைவினால் மட்டுமே சாத்தியமாகியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக கணக்கு பதிவில்,
“இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் நவம்பரில் நமது வரலாற்று வெற்றியின் விளைவாக மட்டுமே நடந்திருக்க முடியும்.
ஒப்பந்த பேச்சுவார்த்தை
ஏனெனில் எனது நிர்வாகம் அமைதியை நாடும்.
மற்றும் அனைத்து அமெரிக்கர்களுக்கும், நமது நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்பதை முழு உலகிற்கும் சமிக்ஞை செய்துள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பணயக்கைதிகள் தங்கள் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் மீண்டும் ஒன்றிணைந்து வீடு திரும்புவார்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆபிரகாம் ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தவுடன், மத்திய கிழக்கிற்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின் முயற்சிகள் மூலம், எனது தேசிய பாதுகாப்பு குழு, காசா மீண்டும் ஒருபோதும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக மாறாமல் பார்த்துக் கொள்ள இஸ்ரேலுடனும் எங்கள் நட்பு நாடுகளுடனும் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றும்.
வரலாற்று சிறப்புமிக்க ஆபிரகாம் ஒப்பந்தங்களை மேலும் விரிவுபடுத்துவதற்காக இந்த போர் நிறுத்தத்தின் உத்வேகத்தை நாங்கள் கட்டியெழுப்பும்போது, பிராந்தியம் முழுவதும் பலத்தின் மூலம் அமைதியை ஊக்குவிப்போம்.
இது அமெரிக்காவிற்கும், உண்மையில், உலகிற்கும் வரவிருக்கும் பெரிய விடயங்களின் ஆரம்பம் மட்டுமே” என பதிவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |