காசா போர்நிறுத்த ஒப்பந்தம் முறியும் அபாயம்: இஸ்ரேலுக்கு எகிப்து அவசர எச்சரிக்கை
காசாவில் நிலவி வரும் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முறிவடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், அதனை மீட்டெடுக்கும் நோக்கில் எகிப்து அரசு அவசர இராஜதந்திர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
காசாவில் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை விரிவாக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எகிப்து, இது அமைதி முயற்சிகளை முற்றிலும் சீர்குலைத்துவிடும் என்று இஸ்ரேலை எச்சரித்துள்ளது.
கடந்த அக்டோபர் 2025இல் அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் கையெழுத்தான அமைதித் திட்டத்தை மீறும் வகையில், காசாவில் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை 53 வீதத்லிருந்து 70வீதமாக விரிவுபடுத்துமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
எச்சரிக்கை
மேலும், ஹமாஸ் அமைப்பின் புதிய இராணுவத் தளபதி முகமது ஒடே கொல்லப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், பாலஸ்தீனர்களை காசாவை விட்டு "சுயவிருப்பத்தின் பேரில் வெளியேற்றும்" திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகள் பிராந்தியத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
பாலஸ்தீனர்களை ரஃபா எல்லை வழியாக எகிப்திற்குள் தள்ளும் எந்தவொரு கட்டாய இடப்பெயர்வு திட்டத்தையும் திட்டவட்டமாக நிராகரித்துள்ள எகிப்து, இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண கத்தார், துருக்கி மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாகச் செயலாற்றி வருகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தை
அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஹமாஸ் அமைப்பின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கலீல் அல்-ஹய்யா தலைமையிலான குழுவிற்கு எகிப்து அவசர அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன், இஸ்ரேலின் இந்த ஆபத்தான போக்கைக் கட்டுப்படுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடமும் எகிப்து கோரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 141 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதால், காசாவில் மீண்டும் ஒரு முழு அளவிலான போர் வெடிப்பதைத் தடுக்க எகிப்து தீவிரமாக முயன்று வருகிறது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam