பிரபல நடிகை கயாத்ரி டயஸிடம் சீ.ஐ.டி விசாரணை
பிரபல நடிகையும், அழகுக் கலை நிபுணருமான கயாத்ரி டயஸிடம் குற்றப்புனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்கு மூலமொன்றை அவர் வழங்கியிருந்தார்.
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தாம் பதிலளித்து விட்டு வந்ததாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

எனவே ஊடகங்களிடம் இந்த விடயம் தொடர்பில் பதிலளிக்க வேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட காரணத்திற்காக தாம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேயுடன் சில நடிகைககளுக்கு தொடர்பு உண்டு என தகவல்கள் வெளியாகியிருந்தது.
எனினும் பத்மே தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதா அல்லது வேறு விவகாரம் தொடர்பிலான விசாரணையா என்பது குறித்து கயாத்ரி டயஸ் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.
அண்மையில் சில நடிகைகளிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.