இலங்கையின் மாபெரும் வெற்றி! இந்திய பிரபல கிரிக்கெட் வீரரின் செயல் - வைரலாகும் வீடியோ
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌத்தம் கம்பீர் இலங்கைக் கொடியை ஏந்தியவாறு மைதானத்தில் காட்சியளித்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்படுகிறது.
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி
15ஆவது ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(11.09.2022) இடம்பெற்றிருந்தது.
இதில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதியிருந்தன. இதனை தொடர்ந்து இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.
இதன்படி 6ஆவது முறையாக ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்ற பெருமையை இலங்கை அணி பெற்றது.
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை வெற்றி கொண்டதையடுத்தே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கௌத்தம் கம்பீரின் டுவிட்டர் பதிவு
போட்டி முடிந்ததும் இலங்கைக் கொடியை தான், கிரிக்கெட் ரசிகர்கள் முன்னிலையில் வைத்திருந்த வீடியோவை கௌத்தம் கம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் அதில், “சுப்பர் ஸ்டார் அணி... உண்மையில் தகுதியானது! வாழ்த்துக்கள் இலங்கை” என அவர் குறிப்பிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
Superstar team…Truly deserving!! #CongratsSriLanka pic.twitter.com/mVshOmhzhe
— Gautam Gambhir (@GautamGambhir) September 11, 2022