கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பில் ஒன்றுகூடல் நிகழ்வு
கிளிநொச்சி மாவட்டத்தின் தொண்டு நிறுவனமான கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று முன்தினம் பிரித்தானிய நேரம் 6 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பு நிகழ்வாகவும், கிளிநொச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களுக்கான வருடாந்த மதிப்பளிக்கும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது.
கெளரவிப்பு நிகழ்வு
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விப் பணிகளை முன்னெடுத்து, ஓய்வு நிலை பாடசாலை முதல்வராக இருந்த எட்வேட் மரியதாஸ் ஆசிரியர் 2021ஆம் ஆண்டுக்கான "மண்ணின் மைந்தன்" என்ற விருதை பெற்று கெளரவிக்கப்பட்டுள்ளார்.
நிகழ்வில் 1000க்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.