பொங்குதமிழ் நிகழ்வுக்கு ஒன்று திரள்வோம் - யாழ்.பல்கலைக்கழகம் அழைப்பு
ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட "பொங்கு தமிழ்" நிகழ்வின் நினைவு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று(17.01.2026) அனுஷ்டிக்கப்படவுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இந்த நிகழ்வு 2001 ஆம் ஆண்டில் முதன்முறையாக நிகழ்த்தப்பட்டது.
அதன்போது, தமிழ்த் தேசியம், தன்னாட்சி உரிமை, மரபு வழித் தாயகம் போன்ற மூன்று வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு
அந்தவகையில் இந்தப் "பொங்கு தமிழ்" நிகழ்வானது வருடா வருடம் அனுஷ்க்கப்படுவது வழமை.

அதன்படி இன்று மதியம் 12 மணியளவில் யாழ். பல்கலைக்கழக "பொங்கு தமிழ்" தூபியில், "பொங்கு தமிழ்" நிகழ்வை அனுஷ்டிக்க அனைத்து மாணவர்களும், பொதுமக்களும் உணர்வோடு அணிதிரள வேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan