முல்லையில் மூன்று இடங்களில் அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய எரிவாயு அடுப்புக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளன.
புதுக்குடியிருப்பு 01 ஆம் வட்டாரப்பகுதியில் கர்பிணி தாய் ஒருவரின் வீட்டில் நேற்று எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
லிற்ரோ எரிவாயு சிலிண்டர் பாவனையாளர்கள் வீடுகளிலேயே உள்ள எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ன.
சமையல் அறைகளில் எரிவாயுவினை பயன்படுத்தி சமையல் செய்யும் போது இந்த எரிவாயு அடுப்புக வெடித்துள்ளது.
கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியிலும் செம்மலை கிராமத்திலும், புதுக்குடியிருப்பு 1 ஆம் வட்டார கிராமத்திலும் இந்த வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து சமையல் எரிவாயுவில் உணவு சமைப்பதை கைவிட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 7 மணி நேரம் முன்
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்