வள்ளுவர்புரம் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு (Photos)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளுவர்புரம் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வள்ளுவர்புரத்தில் எரிவாயு அடுப்பினை பயன்படுத்தும் குடும்பம் ஒன்று வழமை போன்று சமையல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்கள்.
எரிவாயு வழங்கும் முகவரிடமும் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலைவரும் நிலையில் சமையல் எரிவாயு
அடுப்புக்கள் ஆங்காங்கே வெடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
